இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்.! நமீபியா உடனான போட்டியில் நாசூக்கா சொன்ன வீராட்கோலி – பரவும் செய்தி.

20 ஓவர் உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் இந்திய அணி சூப்பர் 12 சுற்று நேற்று இந்திய அணிக்கு முடிந்தது.  கடைசியாக நமிபியா அணியுடன் நேற்று விளையாடியது இதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வெற்றி ருசித்தாலும், அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்படி ஆனது தற்போது பலருக்கும் வருத்தத்தை கொடுத்தது. இந்த போட்டி விராட் கோலியின் கடைசி கேப்டன்ஷிப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று  போட்டியின் போது வீராட் கோலி சில தகவல்களை நம்மிடம் கூறிச் சென்றுள்ளார் அதில் அவர் கூறியது :  போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம்.

எப்பொழுதுமே டாஸ் ஜெயிப்பது மிக முக்கியமான ஒன்று கடைசி இரண்டு போட்டிகளில் நாங்கள் டாஸ் வெற்றி பெற்று பின் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளோம் இந்திய அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு உள்ளேன் அது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்னுடைய கடைசி நாட்களில் நான் சிறப்பாக செயல்பட்டதாக உணருகிறேன்.

கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலகும் நேரம் எனக்கு வந்துவிட்டது. ரோஹித் அடுத்ததாக இந்திய அணியை வழிநடத்த தயாராக இருக்கிறார் இந்திய கிரிக்கெட் தற்போது நல்ல நிலையில் உள்ளது விராட் கோலி கூறினார். இதிலிருந்தே நன்றாகவே தெரிகிறது இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் செயல்பட உள்ளார்.

என்பது அதிலும் குறிப்பாக 20 போட்டிகளில் அவர் தலைமை தாங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவுடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் தலைமை தாங்க இருப்பதாக தெரியவருகிறது.

Leave a Comment