ரோகித் ஷர்மா நீக்கம்.? மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் இவர் தான்.! ரசிகர்கள் அதிர்ச்சி

mumbai indians
mumbai indians

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் மிகக் கோலாகலமாக நடத்தப்படுகிறது இதுவரை 15 சீசன்கள் முடிந்த நிலையில் 16வது சீசன் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது அதற்கு முன்பாக வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது இதில் பல இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் .

அதில் மும்பை இந்தியன்ஸ் அணி சில முக்கிய வீரர்களை தட்டி தூக்க ஆர்வம் காட்டி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் மும்பை அணியில் சில மாற்றங்கள் நிகழ இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது ரோகித் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யா குமார்..

யாதவ், பும்ரா, ஆர்ச்சர், ஷோகீன், அர்ஜுன் டெண்டுல்கர், பெக்ரன்ட்ரூப் மற்றும் சில முக்கிய வீரர்களை தகவைத்துக் கொண்டுள்ளது. இந்த வருடம் கேப்டனாக ரோகித் ஷர்மா நீடிக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது ஏனென்றால் ரோகித் ஷர்மா தற்போது இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டியிலும் கேப்டனாக இருந்து வருகிறார்.

தற்பொழுது நடக்க இருக்கின்ற ஐபிஎல் போட்டியிலும் அவர் கேப்டன் அவர் செயல்பட்டால் அவருக்கு பணிசுமை மற்றும் அழுத்தம் அதிகரிக்கும் என கருதி அவரது சுமையை குறைக்க தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன அதன்படி பார்க்கையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக இஷான் கிஷனை நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் ரோகித் ஷர்மா ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் களத்தில் இஷான் கிஷனுக்கு பல அறிவுரைகள் கொடுத்து  மும்பை இந்தியன்ஸ் அணியை வழி நடத்துவார் என கூறப்படுகிறது. ஐபிஎல் மினி ஏலம் முடிந்த பிறகு அதை மும்பை இந்தியன்ஸ் அணி உறுதிப்படுத்தும் என சொல்லப்படுகிறது.