“தளபதி 67” படத்தில் இவர்தான் மெயின் வில்லன்.? சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா.?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுக்க அவர் வேலை பார்த்து வருவது வழக்கம். அந்த வகையில் விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

அதற்கு முன்பாக விஜய் தனது 66 வது திரைப்படம் ஆன வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் லோகேஷும் தற்பொழுது இந்த கதையை வேற லெவலில் செதுக்கி வருகிறாராம். நிச்சயம் விக்ரம் படம் போலவே இந்த படமும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் வரிசையில் இருக்கும் என தெரிய வருகிறது.

விக்ரம் படத்தில் எப்படி ஏகப்பட்ட கதாபாத்திரங்களோ அதேபோல இந்த படத்திலும் இருக்கும் என ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது. காரணம் இந்த படத்தை ஒரு கேங்ஸ்டர் படமாக எடுக்க உள்ளார். அதனால் இந்த படத்தில் ஏகப்பட்ட வில்லன்க்கள் அதுவும் டாப் ஹீரோக்கள் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்க்கு நிகராக முக்கியமான ஒரு நடிகரை வில்லனாக ஆக்கினால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என கணக்கு போட்டு உள்ளாராம். அதன் காரணமாக கேஜிஎப் படத்தில் மிரட்டிய சஞ்சய் தத் தளபதி 67 படத்தில் வில்லனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என லோகேஷ் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தற்பொழுது அதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரியப்படுகிறது அவர் ஒப்பந்தமாகும் பட்சத்தில் அவருக்கு இந்த படத்தில் 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க கூட ரெடியாக இருப்பதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. சஞ்சய் தத் ஓகே ஆனால் இந்த படம் தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட்டிலும் நல்ல ரீச் ஆகும் என்பதே பட குழுவின் மற்றொரு திட்டமாக இருக்கிறது.

sanjay dutt
sanjay dutt

Leave a Comment