லியோ படத்தில் மெயின் வில்லன் இவர்தான்.! வெளியான சுவாரஸ்யமான தகவல்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பல வில்லன்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இதில் யார் மெயின் வில்லனாக நடிக்கப் போகிறார் என்பது குறித்து சில சுவாரசியமான தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் லியோ படத்திருக்கும் முன்பு விக்ரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் பல வில்லன்கள் நடித்து இருந்தாலும் அவர்களுக்கு மெயின் வில்லனாக விஜய் சேதுபதி இருந்தார் அவருக்கே ஒரு மெயின் வில்லன் என்றால் அது நடிகர் சூர்யா தான்.

அப்படி விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ஆக வந்து மெயின் வில்லனாக களம் இறங்கிய சூரியா அவர்கள். அதே போல ஒரு மெயின் வில்லனாக யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரசிகர்களே இவர்கள் தான் மெயின் வில்லனாக இருப்பார் என்றும் கூறி வருகிறார்கள்.

அதாவது இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது மிஷ்கின் மற்றும் கௌதம் மேனனின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது இதனால் இவர்கள் மெயின் வில்லனாக இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து லியோ படத்தின் படப்பிடிப்பில் காஷ்மீரில் கலந்து கொண்ட சஞ்சய் தத் தான் மெயின் வில்லனாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள் ஏனென்றால் சஞ்சய் காஷ்மீர் மற்றும் சென்னை பகுதியில் நடக்கும் காட்சிகளில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் ரோலக்ஸ் சூர்யா தான் மெயின் வில்லனாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது அப்படியே மெயின் வில்லனாக இருந்தாலும் இந்த படத்தில் அவருடைய பெயரோ அல்லது அவருடைய குரலோ தான் அடிபடும். ஆனால் அவருடைய காட்சி இடம்பெறாது என்று கூறி வருகிறார்கள்.

இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் தான் வைத்திருப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

Leave a Comment