CSK அணியின் மெயின் பிளேர் அவர் தான் – எவ்வளவு காசு கொடுத்தாவது வாங்குவோம்.? காசி விசுவநாதன் பேச்சு.

அடுத்த வருடம் ஐபிஎல் 15 வது சீசன் வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது அதற்கு முன்பாக ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தொடங்க இருக்கிறது ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்ட நிலையில் ஒரு சில முக்கிய வீரர்களை வாங்கியே ஆகவேண்டும் என்ற குறிக்கோளில் இருக்கிறதாம்.

சென்னை அணி ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, அலி, ருத்ராஜ் போன்றவர்களை தக்கவைத்துக்கொண்டது. மீதி இருக்கின்ற வீரர்களை ஏலத்தில் விட்டு இருந்தாலும் முதலில் ஓரிரு வீரர்களை சிஎஸ்கே அணி எடுக்க திட்டமிட்டு உள்ளது.அந்த வகையில் டு பிளேசிஸ் எடுக்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதோடு கடந்த இரண்டு சீசன்களில் சென்னை அணியை கடைசி வரை கொண்டு சென்றவர்ர் அதிலும் குறிப்பாக நடப்பு சாம்பியன் ஆவதற்கு சிஎஸ்கே அணிக்கு அதிக பங்கு வகித்தவர் டு பிளேசிஸ்.

இவரை தற்போது ஏலத்தில் விட்டது சிஎஸ்கே அணி விட்டுள்ளது. இது குறித்து பேசிய காசி விசுவநாதன் சென்னை அணியை இரண்டு முறை இறுதி வரை அழைத்துச் சென்றவர் டு பிளேசிஸ். அவரை முதன்மை வீரராக வாங்க வேண்டியது எங்கள் கடமை. CSK வாங்க முயற்சிப்போம் ஆனால் நமது கையில் எதுவும் இல்லை அவர் எங்கிருந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்போம் என்று கூறினார்.

சிஎஸ்கே அணிக்கு மீண்டும் பழைய வீரர்களையே வாங்க அதிகம் திட்டம் தீட்டி வருகிறது ஏற்கனவே ரெய்னாவை தான் முதலில் வீரராக குறி வைத்துள்ளது அதன்பின் சாம்கரன், டு பிளேசிஸ் ஆகியோர்களை வாங்கவும் அதிக முயற்சித்து உள்ளது.

Leave a Comment