இன்று சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் இவர்!! இதற்க்கு முன் தோற்றத்தினால் ஏற்பட்ட அவமானம், கண்ணீர்,பட்டினி போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள்.

0

He is the leading comedian in cinema today but before :நடிகர் யோகி பாபு தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. இவர் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்றால் அந்தப் படத்தைப் பார்க்க யோசிக்காமல் செல்லலாம். அந்த அளவுக்கு அவர் நடிப்பு மக்களை கவர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மேலும் தற்போது உள்ள இயக்குனர்கள் கதை எழுதும்போதே யோகிபாபுவை மனதில் வைத்துதான் எழுத ஆரம்பிக்கிறார்கள். தற்போது உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடிப்பு வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த அளவிற்கு தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்துள்ளார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

இந்த இடத்திற்கு வருவதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை பாருங்கள். மேலும் இவர் அஜித்தின் செல்லப்பிள்ளை என்பது குறிப்பிடதக்கது. இவரின் உடல் தோற்றத்தால் குழந்தைகள் முதல் அனைவராலும் வெறுக்கப்பட்டவர். அதுமட்டுமலலாமல் தனது நண்பருடன் தனியார் தொலைக்காட்சி நடத்தும் காமெடி ஷோவிற்கு துணைக்கு செல்வாராம் அப்போது ஏக்கத்துடன் ஓரமாக நின்று சூட்டிங் பார்ப்பாராம்.

இவரின் தோற்றத்தினால் இவருக்கு நடிக்க வாய்ப்பு கேட்கவே பயமாக இருக்குமாம். ஒருநாள் தொலைக்காட்சி இயக்குனர் ஒருவர் இவரின் தோற்றத்தைப் பார்த்து காமெடியாக தோன்றியதால் டிவி காமெடி ஷோவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாராம். தனது தோற்றத்தினால் கூனிக்குறுகி போய் நின்ற இவருக்கு ஒரு தன்னம்பிக்கை வந்ததாம்.

பின்னர் அதனை தொடர்ந்து போராடி சினிமாவில் நுழைந்தார். அதன்பின் இவர் நடித்த பன்னிவாயன் என்கின்ற கதாபாத்திரம் இவரை ரசிகர்கள் மனதில் ஆழமாய் பதிய  வைத்ததாம். தற்போது இவரது நடிப்பு பாலிவுட் சினிமா வரை பரவியது. மேலும் இனறு இவர் இரவு பகல் பாராமல் நடித்து வருகிறார். அந்த அளவுக்கு பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாதாரண மனிதராகவே இன்றும் உலாவருவது இவரது குணத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் இவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இவர் நாசூக்காக மறுத்து விட்டு தனக்கான கேரக்டர்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.

yogi-babu with wife-tamil360newz
yogi-babu with wife-tamil360newz
yogi-tamil360newz
yogi-tamil360newz
Yogi-Babu-1-tamil360newz
Yogi-Babu-1-tamil360newz