திரையரங்கில் மிரட்டிய ராட்சசன் பட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் ஹீரோ இவர் தான்.? அப்ப இதுவும் திரில்லர் திரைப்படமா.?

rachchsan
rachchsan

தமிழ் சினிமாவில் ஒரு சில புது இயக்குனர்கள் ஒரு சில திரைப்படங்களிலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்து விடுவார்கள் அந்த வகையில் பல இயக்குனர்கள் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்து வருகிறார்கள் இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ராட்சசன்.

இந்த திரைப்படத்தில் அமலா பால், சரவணன் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை டில்லி பாபு ஸ்ரீதர் ஆகியோர்கள் இணைந்து தயாரித்திருந்தார்கள். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை பெற்றது அதனால் இந்த திரைப்படம் ஹீட் வரிசையில் இணைந்தது.

அதேபோல் ராட்சசன் திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் ராட்சசன் திரைப்படத்தின் இயக்குனர் ராம் குமார் அடுத்ததாக யார் திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களாக வேறு எந்த திரைப்படத்தையும் இயக்காத நிலையில் தற்போது புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதே போல் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கும் அடுத்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு லவ் ஸ்டோரி திரைப்படமாக இருக்கும் எனவும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராட்சசன் திரைப்படத்தில் நடித்த விஷ்ணு விஷால் தான் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அதேபோல் இந்த திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை கொடுத்த ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணி  மீண்டும் இனைய இருப்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.