விடுதலை படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோவாக கமிட்டாகும் சூரி.! அடுத்த பட இயக்குனர் இவர்தான்..

தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தவர் தான் நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்று இருந்த பரோட்டா காமெடியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நிலையில் பிறகு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் முதன்முறையாக தற்பொழுது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சூரி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எனவே இவருக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் இரண்டாவது பாகம் மூன்று மாதங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் சூரிக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கான பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அதாவது தற்பொழுது இவர் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மதயானை கூட்டம் படத்தினை இயக்கிய இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்க உள்ளார். எனவே தற்போது சுகுமார் இயக்கியுள்ள இராவண கோட்டம் பட வெளியிட்டுருக்கு பிறகு சூரியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தினை டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் மேலும் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு நகைச்சுவை நடிகராக இருந்து அந்த நடிகரை ஹீரோவாக ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம் ஆனால் ரசிகர்கள் சூரியை ஒரே படத்திலேயே ஹீரோவாக ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment