சென்னை அணியின் கேப்டன் இவர்தான்.! கே எஸ் விஸ்வநாதன் அதிரடி பேட்டி…

10 அணிகள் பங்குபெறும் 16வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து அணியில் தக்க வைத்து கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை 15ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கெடு வைத்திருந்தது. இதன்படி நேத்து வீரர்களின் பட்டியலில் சமர்ப்பிக்கப்பட்ட வீரர்களை வெளியேற்றிய அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 வீரர்களையும் மும்பை இந்தியன்ஸ் 13 வீரர்ககலை விடுவித்துள்ளது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், க்ரிஷ் ஜேர்டன்,  ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  கிரிக்கெட் வீரர் உத்தப்பா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

இதனை தொடர்ந்து 39 வயதான ஆல் ரவுண்டர் பிராவோவின் பந்து வீழ்ச்சி மற்றும் பேட்டிங் சரியாக இல்லாததால் அவரை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார் இதன் மூலம் சென்னை அணியுடன் பிராவோவின் 11 ஆண்டுகால உறவு இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டனான டோனி அவர்கள் இன்னும் சில போட்டிகளில் கேப்டனாக தோனி நீடிப்பார் என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி கே எஸ் விஸ்வநாதன் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கேஸ் விஸ்வநாதன் கூறும்போது வீரர்களை விடுவித்தது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக தான் இருக்கிறது அது மட்டுமல்லாமல் சென்னை அணிக்காக அவர்கள் நிறைய பங்களிப்பு செய்துள்ளனர் இந்த நிலையில் அவர்கள் யாராவது மறுபடியும் ஏலத்தில் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் அதை நாங்கள் செய்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment