பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் இவர் தான்.. அடித்துக் கூறும் விஜே பிரியங்கா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
BIGBOSS
BIGBOSS

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஆரம்பித்து 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஜி.பி முத்து, சாந்தி, ஷெரினா, நிவாசினி, ராபர்ட் மாஸ்டர், குயின் சி, அசல் கோளாறு, வி ஜே மகேஸ்வரி போன்ற போட்டியாளர்கள்..

வெளியேறிய நிலையில் தற்போது அசீம், அமுதவாணன், விக்ரமன், ஏடிகே, கதிரவன், சிவின், ஆயிஷா, ரக்ஷிதா, மைனா நந்தினி, தனலட்சுமி, ராம், ஜனனி, மணிகண்டன் போன்ற போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளது அதில் கதிரவன் அல்லது ஆயிஷா வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இப்போது இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு யுத்தியை கையாண்டு விளையாடுகின்றனர். அதில் பெரும்பாலும் மக்களை கவர்ந்தவர்கள் என்றால் அசீம் மற்றும் விக்ரமன் மேலும் சிவினும் ஒவ்வொரு டாஸ்கிலும் சிறப்பாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் எனவே இந்த மூன்று போட்டியாளர்களின் ஒருவர்..

வெற்றி பெற தான் அதிகம் வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் டிவி ஏற்கனவே டைட்டில் வின்னரை தேர்வு செய்து விடுவார்களாம் அதன்படி தான் போட்டிகளை நடத்துவார்களாம் அப்படித்தான் கடந்த சீசனிலும் கூட ராஜு மற்றும் பிரியங்காவை வெற்றி பெற செய்தனர்.

இந்த நிலையில் விஜய் டிவி வீஜே பிரியங்காவிடம் பிக் பாஸ் 6 டைட்டில் யார் வின் செய்வார் என கேட்டதற்கு விக்ரமன் என பதில் அளித்துள்ளார். அவர் எல்லாவற்றிலும் சிறப்பாக விளையாடுகிறார். அதனால் விக்ரமன் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக பிரியங்கா தெரிவித்துள்ளார். வீ ஜே பிரியங்கா கூறிய இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வெளியாகி பரவி வருகிறது.