ஒரு ரூபாய் கூட காசு வாங்கமால் முழு படத்தை நடித்த நடிகர் இவர் தான்.! பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

தமிழ் திரை உலகில் அறிமுகமாகும் நடிகர்கள் எந்த காலகட்டத்தில் இருந்தாலும் சரி தனது முதல் படத்திற்காக எவ்வளவு சம்பளம்  கொடுத்தாலும் அதனை வாங்கி கொண்டு நடிப்பது வழக்கம் ஆனால் அத்தகைய நடிகர்கள் ஒரு காலகட்டத்தில் வளர்ந்த பின்பு தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்திக் கொண்டு நடிப்பார்கள்.

அப்படி இவர்கள் சம்பளத்தை உயர்த்திக் கொண்டு நடித்து சென்றுவிடுவார்கள் அதன்பின் அந்த இயக்குனர் லாபம் பெற்றாரா அல்லது நஷ்டம் அடைந்தாரா என்பதை எல்லாம் பெரிதும் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க சென்று விடுவார்கள் இது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் ஒரு சில நடிகர்கள் தங்களின் படங்கள் நஷ்டம் அடைந்தால் அந்த தயாரிப்பாளர்களுக்கு மீண்டும் ஒரு படத்தை கொடுத்து அவரை மீண்டும் சினிமா உலகிற்கு ஏற்றுக்கொண்டு விடுபவர்கள் அவர்கள் தான் ரஜினி ,அஜித் ,விஜய்.

இவர்களில் முதன்மையானவராக விளங்குவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது நூறாவது படமான ராகவேந்திரா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை அடைந்தது கவிதலாயா கம்பெனி அந்த கம்பெனிக்கு ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் வேலைக்காரன் படத்தில் நடித்துக் கொடுத்தார்.

அதுபோல பாபா படமும் மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்ததால் உடனடியாக தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு பணம் கொடுத்து செட்டில் செய்தார் இத்தகைய செய்தியை திரையரங்க சங்க தலைவர்  திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் இதனால் அவர் தமிழ் சினிமாவில் நம்பர்-1 சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் என்று பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Comment