காமெடி நடிகர்களில் இவர் தான் டாப் – 1000 படங்களில் நடித்துள்ளாராம்.! அப்புறம் தான் வடிவேலு, கவுண்டமணி எல்லாம்.!

திறமை இருப்பவர்கள் தொடர்ந்து சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் அதை பல நடிகர்கள் இப்பொழுதும் செய்து காட்டி வருகின்றனர் அந்த வகையில் தெலுங்கு மற்றும் தமிழ் என அனைத்துவிதமான மொழிகளிலும் காமெடியனாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வருவர் நடிகர் பிரம்மானந்தம்.

எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது திறமையை வெளிக்காட்டும் அசாதாரணமான நடிகர்களில் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழ் சினிமாவில் எப்படி உச்ச நட்சத்திரங்களாக கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியவர்களை பேசுகிறோமோ..

அதேபோல தென்னிந்திய அளவில் பல்வேறு படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருவர் தான் பிரம்மானந்தம் இதுவரை அவர் 1000 -த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசைக்கமுடியாத ஒரு இடத்தில் இருக்கிறார். தெலுங்குகில் டாப் காமெடி நடிகர் இவர். இவருக்கு இப்போது வயது 65 வயது ஆகிறது.

இப்போதும் கூட பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தி வருகிறார் தமிழில் இவர் மரகத நாணயம், தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்பொழுது ஒரு படத்திற்கு நடிக்க ஒரு நாளைக்கு சுமார் ஒரு கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

வயது அதிகமாக இருந்தாலும் இவரது காமெடி மற்றும் இன்று வரை குறையாமல் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது அதனால் பிரம்மானந்தம் இன்னும் சினிமாவில் ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் ஒரு படத்திற்கு சுமார் 2 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Leave a Comment