இந்திய அணியில் மிகவும் ஆக்ரோஷமாகவும், திறமையான வீரராகவும் செயல்படக்கூடியவர் இவர் ஒருவர்தான் – ஆண்டர்சன் வெளிப்படையான பேச்சு.

இந்திய அணி தற்போது இங்கிலாந்து உடன்னான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது அதில் முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை விடாமல் இருந்தாலும் ஒரு கட்டத்தில் தொடர்ந்து விக்கெட்டுகளை கொடுத்தது இருப்பினும் கே எல் ராகுல், ஜடேஜாவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவு ரன்களை சேர்த்தனர்.

முதல் இன்னிங்சில் அதிரடி ஆட்டக்காரர் பண்ட் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும் அவர் விளையாடும் விதம் பலரையும் கவர்ந்தது அந்த வகையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட் ஆட்டத்தை பார்த்து அசந்து போய் விட்டாராம் அவர் கூறியது.

நான் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன் ஆனால் ரிஷப் பண்ட் ஒரு வித்தியாசமான பேட்ஸ்மேனாக இருக்கிறார் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய அவர்கள் வித்தியாசமாக யோசித்து சாட்டுகளை விளையாடி வருகிறார். குறிப்பாக என்னை போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சி செய்கிறார்.

அவர் ஒரு திறமையான வீரர் தான் அது மட்டுமின்றி நல்ல டேலேன்ட் உடைய பிளேயர் ஆகவும் அவர் திகழ்கிறார் என புகழ்ந்து தள்ளினார். பல்வேறு போட்டிகளில் விளையாடி எதிரணி வீரர்களை நடுநடுங்க செய்வதில் ஆண்டர்சனுக்கு நிகர் அவரே தான் ஏனென்றால் அந்த அளவிற்கு சூப்பராக பந்துவீச கூடியவர்.

pant
pant

ஆனால் தற்போது இந்திய அணியில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரோகித், கோலி, ரஹானே, புஜாரா ஆகியோர் களைவிட ரிஷப் பண்ட்டை அவர் பாராட்டி உள்ளது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment