மருதநாயகம் படத்தில் கமல்க்கு பதில் இனி ஹீரோ இவர்தான்.! ஆனா இயக்குனர் இவர்தான்… போடுடா வெடிய

நடிகர் கமலஹாசன் இயக்கி தயாரித்து நடிக்க இருந்த திரைப்படம் மருதநாயகம் இந்த திரைப்படம் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்று இருந்தார். மிக பிரம்மாண்டமாக  நடத்தப்பட்ட தொடக்க விழா அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இந்த நிலையில் மருதநாயகம் திரைப்படம் நிதி நெருக்கடியால் பாதியில் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அல்லது பேட்டிகளாக இருந்தாலும்  மருதநாயகம் திரைப்படத்தைப் பற்றி பல கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் பட்ஜெட் கொடுக்க எந்த தயாரிப்பாளராக முன் வந்தால் மீண்டும் மருதநாயகம் தொடங்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட மருதநாயகம் மீண்டும் தொடங்க உள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த முறை மருதநாயகம் படத்தில் கமல்ஹாசன் நடிக்க வில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறியுள்ளனர்.

ஏற்கனவே 38 சதவீதம் படமாக்கப்பட்ட நிலையில் மருதநாயகம் படத்தில் புதிய ஹீரோ நடித்தால் மறுபடியும் படப்பிடிப்பு முதலில் இருந்து தொடங்குவதால் யார் இந்த படத்தின் ஹீரோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். இந்த நிலையில் மருதநாயகம் திரைப்படத்தில் சூர்யா அல்லது விக்ரம் இவர்களில் யாராவது ஒரு நடிகர் மருதநாயகம் படத்தில் ஹீரோவாக நடிப்பார்கள் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விரைவில் மருதநாயகம் திரைப்படம் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment