விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பியில் முன்னணி வகித்துவரும் நிலையில் இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் திடீரென விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இன்னும் 10, 15 எபிசோடுகளுடன் தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை சதீஷ் வெளியிட்டு இருந்த நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. ஒரு குடும்பத் தலைவி திருமணம் செய்துக் கொண்டு தன்னுடைய குடும்பத்திற்காக எவ்வளவு தியாகம் செய்கிறார் என்பதனையும் அவருடைய மனவலிமையையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
அப்படிப்பட்ட மனைவியை கணவன் வேறுத்துவரும் நிலையில் ஒரு கட்டத்தில் அவளைப் பிரிந்து தனது கல்லூரி காதலியை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். அப்படி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி படாத பாடு பட்டு வந்த நிலையில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த தொடங்கியது.
இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் இந்த சீரியலில் இருந்து திடீரென கோபி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் இன்னும் பத்து, பதினைந்து எபிசோடுகள் மட்டுமே பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பதாகவும் பிறகு இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த சீரியலில் நடித்ததற்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி மற்றும் ஆதரவளித்த மக்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்து இருந்தார். இவ்வாறு தற்பொழுது வந்திருக்கும் தகவலின் படி கோபி கதாபாத்திரத்தில் இதற்கு மேல் பப்லு பிருத்திவிராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.