ரஜினிக்கு அடுத்தது இவர் தான், அன்றே அவர் என்னிடம் கூறினார்.!பிரபல தயாரிப்பாளர் அதிரடி பேச்சி!!

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். இவர் சினிமாவில் நுழைய யாருடைய உதவியுமின்றி தன்னுடைய கடின உழைப்பினால் தனி ஒருவனாக திரைத் துறையில் நுழைந்தவர் தல அஜித்.

கடந்த வருடம் அஜித் அவர்களுக்கு சிறந்த வருடமாக அமைந்தது ஏனென்றால் சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமில்லமால் பெண் ரசிகர்களையும் கவர்ந்த படமாக அமைந்தது. அதே ஆண்டு இறுதியில் இந்தியில் வெளிவந்த பிங்க் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்தனர்.

அதற்கு நேர்கொண்ட பார்வை என பெயர் சூட்டப்பட்டது. அஜித் அவர்கள் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் ,வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் அஜித் அவர்கள்  தற்பொழுது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து கொண்டு வருகிறார். இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழில் பிரபல தயாரிப்பாளர்  P.L. தேனப்பன் அவர்கள் நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியது வில்லன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் அஜித் என்னிடம் ஒரு நாள் கண்டிப்பாக  சூப்பர் ஸ்டாராக அடுத்தது நான் தான் இருப்பேன் என கூறினார். அதேபோல் தற்போது அவர் தான் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக உள்ளார் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். அதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

thenappan

Leave a Comment