தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த ஹீரோ இவர்தான் – சமந்தாவின் மாஜி கணவர் பதில்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் இதுவரை பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் ரசிகர்கள் மட்டும் இவருக்கு அதிகரித்த வண்ணமே இருக்கின்றனர் அதற்கு காரணம் சினிமாவையும் தாண்டி நடிகர் அஜித்தை ரசிகர்கள் நேசிக்கின்றனர் அதனால் தான் அவரது வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ரசிகர்களுக்கு ஏற்றவாறு வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து தான் வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது அதனை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை ஹச் வினோத்துடன் கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட இருக்கிறது. ஏகே 61 திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து சமுத்திரகனி, வீரா, மலையாள நடிகை மஞ்சு வாரியர், யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. அஜித் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. ஒன்று வயதான கெட்டப் போன்று மற்றொன்று இளமையான கெட்டப் என நடிக்க உள்ளார். முதல் கட்ட சூட்டிங்கில் அஜித் வயதான கெட்டப்பில் நடித்துள்ளார் அடுத்த கட்ட சூட்டிங்கில் அவர் இளமையான கெட்டப்பில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்திகள் இணையதள பக்கங்களில் வெளிவந்த வண்ணமே இருக்கிறது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யா அஜித் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொல்வது. நான் அஜித்தின் மிகப்பெரிய தீவிர ரசிகன். அவரை சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி எனக்கு ரொம்ப பிடிக்கும் என வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

Leave a Comment