லியோ விஜயைவிட இவர்தான் மாஸ்.! திடீரென வைரலாகும் ரோலக்ஸ்ன் புகைப்படம்…

வெறும் 4 படங்களை மட்டுமே இயக்கி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் லோகேஷ் இயக்கம் அனைத்து படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்திற்கான டைட்டில் குறித்த அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்கு லியோ என்ற டைட்டிலை வைத்துள்ளனர். இதை தொடர்ந்து தற்போது இணையத்தில் முழுக்க முழுக்க தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் தான் அதிகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் திடீரென விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் வந்து ரசிகர்களை அலறவிட்ட சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் புகைப்படம் திடிரென வைரலாகி வருகிறது. அதாவது லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைய உள்ளதால் விக்ரம் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களின் காட்சிகள் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் தற்போது வெளியான லியோ படத்தின் ப்ரோமோவில் விக்ரம் படத்தில் வரும் முகமூடி வில்லன்கள் போல லியோ படத்திலும் அந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது இதனால் விக்ரம் படத்தின் தொடர்கதையாக தான் லியோ இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்போது திடீரென ரோலக்ஸ் என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது அது மட்டுமல்லாமல் விஜயின் லியோ கேரக்டரை விட சூர்யாவின் ரோலக்ஸ் தான் மாஸ் என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் லியோ படத்தில் விஜய்யும் சூர்யாவும் நண்பர்களாக இருக்க நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் படத்தின் இறுதியில் தெரிந்துவிடும் என்றும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment