பார்க்க தான் இவர் காமெடி நடிகர்.! ஆனால் இவர் இயக்கிய 5 திரைப்படங்களும் தமிழ் சினிமாவையே அலறவிட்டது.

சினிமா உலகில் பயணித்து வரும் நடிகர்கள் பலரும் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் வேறு ஏதேனும் ஒரு ஒரு பணியில் வெற்றிகண்ட பின் அதிலிருந்து மாறுபட்டு தற்பொழுது நடிப்பது வழக்கம் அப்படி தமிழ் சினிமா உலகில் பலர் உள்ளனர் அதில் ஒருவராக உள்ளவர்தான் கஜேந்திரன் இவர் சினிமா உலகில் தற்போது காமெடியனாக நடித்து வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனராக ரகுவும் பணியாற்றி உள்ளார்.

இவர் தமிழ் சினிமா உலகில்  சிதம்பர ரகசியம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த அதன்பின் இயக்குனராக களம் கண்ட அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் அர்த்தமுள்ள படத்தையும் கொடுத்துள்ளார் அந்த வகையில் இவர் கொடுத்துள்ள படங்கள் என்னவென்று தற்போது பார்ப்போம்.

மிடில் கிளாஸ் மாதவன் : கஜேந்திரன் மிடில் கிளாஸ் மாதவன் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் இத்திரைப்படத்தில் பிரபு மற்றும் அபிராமி, விவேக் ,வடிவேலு, வீசு போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர் இப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வசூலில் சாதனை படைத்தது அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் கதை குடும்பங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியது இது பலருக்கும் பிடித்துப்போனதால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மேலும் காமெடி நடிகர் இதுபோன்ற படத்தை எடுத்தது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது என்றும் கூறிவந்தனர்.

பந்தா பரமசிவம் : கஜேந்திரன் மீண்டும்  பிரபுவை வைத்து பந்தா பரமசிவம் என்ற திரைப்படத்தை எழுதி இருந்தார் இத்திரைப்படத்தில் பிரபுவுடன் இணைந்து மோனிகா, கலாபவன் மணி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் இத்திரைப்படம் 2003 இல் எடுக்கப்பட்டது இத்திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் கதைகளம் சிறப்பாக இருந்ததால் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது.

எங்கள் ஊரு காவல்காரன் : எங்கள் ஊரு காவல்காரன் என்ற திரைப்படம் நாம் அனைவரும் அறிந்ததே  இப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர் தான் இயக்குனர் கஜேந்திரன் இவர் நடிகர் ராமராஜனை வைத்து இத்திரைப்படத்தை எடுத்தார் இத்திரைப்படத்தில் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர் அதிலும் குறிப்பாக கௌதமி ,நம்பியார் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் இத்திரைப்படம் 1988 இல் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் 100 நாட்களுக்கு மேல் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது இது ராமராஜனுக்கு ஒரு முக்கிய படமாகவும் கூறப்பட்டது.

பட்ஜெட் பத்மநாபன் : ராஜேந்திரன் அவர்கள் மீண்டும் பிரபுவுடன் இணைந்து பட்ஜெட் பத்மநாபன் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் இத்திரைப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது அதற்கு முக்கிய காரணம் ஒரு மிடில்கிளாஸ் குடும்பம் எப்படி சிக்கனப்படுத்த வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக மக்களுக்கு எடுத்து வைத்து இது மக்களுக்கு பலருக்கும் பிடித்தமான படமாக அமைந்தது மேலும் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது இப்படத்தில் பிரபுதேவா மற்றும மணிகண்டன் விவேக் ரம்யாகிருஷ்ணன் மும்தாஜ் போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

பாண்டிய நாட்டு தங்கம் : கார்த்தியுடன் இணைந்து பாண்டிய நாட்டு தங்கம் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் இத்திரைப்படம் சிறப்பாக ஓடியது.

தமிழ் திரை உலகில் ஒரு காமெடி நடிகர் இத்தனை மிகப்பெரிய ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது மேலும் குறைந்த பட்ஜெட்டில் எடுத்த படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது இதன் மூலம் பல தயாரிப்பாளர்களை வளர்த்து விட்டார் கஜேந்திரன்.

 

Leave a Comment