சந்திக்கும் முதல் பந்தையே மிக சாதாரணமாக விளையாடும் திறமை இவரிடம் உள்ளது.! இந்திய அணியின் முன்னாள் வீரர் கணிப்பு.! யாருடா அது.

0

இளம் இந்திய அணி இலங்கை அணியுடனான 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று  20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது ஒருநாள் போட்டி கோப்பையை வென்ற நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் போட்டியில் வென்றுள்ளது இந்தியா.

மீதி இருக்கிற இரண்டு 20 ஓவர் போட்டியில்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோப்பையை தன்வசப்படுத்தும் என இந்திய ரசிகர்கள் பலரும் தன்னம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வரும் இளம் வீரர்களை நன்கு பார்த்து அவர்களது திறமை மற்றும் ஆர்வத்தை கண்டுபிடித்து வருகின்றனர் அந்த வகையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சூப்பராக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் பற்றி கிரிக்கெட் வல்லுனர்கள் நல்லவிதமாக சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் சூரியகுமார்  குறித்து பேசியுள்ளார் அவர் கூறியது. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வரும் போது விக்கெட்டுகள் விழுந்திருந்தாலும் முதல் பந்தை ஏற்கனவே பல பந்துகள் விளையாண்டது போல விளையாடுகிறார்.

அவருக்கு எந்த நேரத்திலும் எந்த விதமான பதட்டமும் சந்தேகமும் இல்லாமல் மிகுந்த தெளிவுடன் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்கிறார். அவரது ஆட்டத்தை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது வயதான பிறகும் மற்ற வீரர்கள் விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறினார்.