விஜய் சேதுபதியின் பயோபிக்கில் இவர் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்குமாம் – யாரை கைகாட்டி உள்ளார் தெரியுமா.?

நடிகர் விஜய் சேதுபதி  சினிமா உலகில் முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறினார் ஒரு கட்டத்தில் இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து தற்போது தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளார். அண்மையில் கூட இவர் தளபதி விஜயுடன் கைகோர்த்து மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிரட்டும் வகையில் மிகச் சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ஹிந்தி படத்தில் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட் பிரபல நடிகையான கத்தரினா கைஃப் உடன் ஜோடி சேர்ந்து விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது. மேலும் தமிழில் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி உன் கை கோர்த்து  நயன்தாரா சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படமும் விரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது அதோடு மட்டுமல்லாமல் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களுடைய பயோபிக்கில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கேட்டுள்ளனர்.

அதற்கு சிறிது நேரம் யோசித்துவிட்டு நான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார் பின் அவர் சொன்னது சிறிது நேரம் யோசித்தேன் அப்போது கமல் வந்து போனார் இருப்பினும் மற்றவர்களைவிட என்னுடைய வாழ்க்கை கதையில் நான் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என கூறினார். எல்லோருமே சிறந்த நடிகர்கள்தான் இருப்பினும் யாரையும் குறிப்பிடுவது என்று எனக்கு தெரியவில்லை எனவே நான் இந்த படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என  கூறினார்.

Leave a Comment