இந்தியன் 2 படக்குழு தற்பொழுது எங்கு இருக்கிறார்கள் பார்த்தீர்களா.? இதோ இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் வெளியான பொழுது பல கோடி வரை வசூல் செய்யப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தை எப்படியாவது இரண்டாம் பாகமாக இயக்குனர் ஷங்கர் எடுக்க முடிவு செய்தார்.

அந்த வகையில் பார்த்தால் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்காக பல வருடங்கள் ஆகிவிட்டது என்றே கூறலாம் ஆனால் கடந்த வருடம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி,பாபி சிம்ஹா, காஜல் அகர்வால்,பிரியா பவானி சங்கர் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

மேலும் இந்த இரண்டாம் பாகம் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பு நடந்து வந்தது அதனை தொடர்ந்து தற்பொழுது படப்பிடிப்பிற்காக இந்தியன் 2 படக்குழு தென் அமெரிக்கா சென்றார்கள்.

ஆனால் தற்பொழுது அங்கும் படப்பிடிப்பு முடியப்போகிறது என்பதை தெரிவிப்பதற்காக ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷங்கர் வித்யாசமான இடத்தில் இருக்கிறார். வெளிநாடுகளில் இது போன்ற இடங்களை பார்க்குவதற்கு ரசிகர்கள் மிகவும் ஆசைப்படுவார்கள்.

இயக்குனர் ஷங்கர் திரைப்படத்தில் மட்டும் தான் இது போன்ற அனைத்து வகையான காட்சிகளையும் மக்கள் பார்த்து ரசித்தும் வருவார்கள் என கமெண்ட் பதிவு செய்தும் வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இந்தியன் 2 திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்றும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment