விஜய் சேதுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா.! மடமடன்னு வளர்ந்துட்டாங்களே.!

vijay sethupathi
vijay sethupathi

விஜய் மற்றும் விஜய்சதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு 13ம் தேதி 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியாக உள்ளது என சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

மேலும் விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்திற்கு முன்னே ரஜினி நடித்த பேட்டை என்ற திரைப் படத்தில் ரஜினிக்கு எதிர்மறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதனையடுத்து விஜய் சேதுபதி தனது மகனை சூர்யாவை சிந்துபாத் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார் அடுத்ததாக இவரது மகளான ஸ்ரீஜாவை முகிழ் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்துகிறாராம்.

அதுமட்டுமல்லாமல் முகிழ் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது என விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் இவர் பகிர்ந்த பதிவானது தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.