தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து மாஸ் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் ரஜினி. ரஜினியின் திரை படங்கள் ஒவ்வொன்றும் மாஸ் திரைப்படங்களாக தொடர்ந்து இருந்த காரணத்தினால் ரசிகர்களும்,மக்களும் இவரது திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
இதனால் வசூல் மன்னனாக மாறினார் ரஜினி மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தினார். தொடர்ந்து வெற்றியை கண்டு ஓடி கொண்டு இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1981-ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா.
சினிமா உலகில் 40 வருடங்களாக பயணித்து வந்த இருந்தாலும் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்திற்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து சூப்பராக பணியாற்றி வருகிறார். இப்போது இளம் நடிகர்கள் கூட வழிவிடாமல் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு வலம் வருகிறார்.
அண்மையில் கூட சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த என்ற படத்தில் நடித்தார். படம் நல்லதொரு வெற்றியை ருசித்தது அதனை தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குனருடன் கதை கேட்டு ஒருவழியாக இயக்குனர்களை தேர்வு செய்துள்ளார் அந்த வகையில் ரஜினியின் 169 வது திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் உள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாத் துறையில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி அவ்வப்போது சில விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்து கொண்ட பொது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..
