பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளை பார்த்து இருப்பீர்கள்.! அவரது மகனை நீங்கள் லேட்டஸ்ட்டாக பார்த்து உள்ளீர்களா.? எப்படி இருக்கிறார் பாருங்கள்.

சினிமா உலகில் சிறப்பான இயக்குனர்கள் பலரும் இருந்தாலும் அதிலிருந்து தன்னை தனித்துவமாக தெரிய வைக்க இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட பட்ஜெட் படங்களை எடுக்க ஆரம்பித்தார் அதிலும் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் அவரது படம் ஒவ்வொன்றும் 100 கோடிக்கு மேல் தான் பட்ஜெட் இருந்து வந்துள்ளன.

அதற்கு ஏற்றபடி படத்தை ஹெச்டி தரத்திலும் மிக சூப்பராகவும் கொடுத்து அசத்துவது அவருக்கு கை வந்த கலை மேலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு 100 கோடியை தாண்டி தான் வசூல் ஈட்டி உள்ளன இதனால் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் கவனிக்கப்பட கூடிய ஒரு இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.

சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினார் ஆனால் அது சிக்கலில் முடிய தற்போது இந்தி மற்றும் தெலுங்கு பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார் தெலுங்கில் பல கோடி பட்ஜெட்டில் ராம்சரண் வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க ரெடியாக இருக்கிறார். அந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது புனேவில் பிரம்மாண்ட செட் அமைத்து எடுக்கப்பட இருக்கிறது.

இவரைத் தொடர்ந்து இவரது மகள் அதிதி சங்கரும் தற்போது சினிமா உலகில் வெற்றிநடை போடுகிறார் முதல்படமே கார்த்தியுடன் கைகோர்த்த விருமன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் முதல் படத்திலேயே ஹீரோயின்னாக நடிப்பதால் அவருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஷங்கரின் மகன் அர்ஜித் சங்கர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் அதிதி ஷங்கரை தொடர்ந்து தனது மகனையும் சினிமா உலகில் களமிறக்க ரெடியாக இருக்கிறாராம் இந்த நிலையில் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shankar family
shankar family

Leave a Comment