வைகை புயல் வடிவேலுவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா. இதோ பாருங்கள்.!

90 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் தொடர்ந்து பல காமெடி படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி கண்டவர் வடிவேலு. இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா விக்ரம் என டாப் நடிகர்கள் படங்களில் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டு ஓடினார்.

இவர் நடித்த இருபத்தி மூன்றாம் புலிகேசி இரண்டாம் பாகத்தின் போகுது சில பிரச்சனைகள் இருந்த காரணத்தினால் கடந்த நான்கு வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்ததால் புதுமுக காமெடி நடிகரின் வரவேற்பு அதிகமாகி இருந்தது.

ஆனால் தற்போது அந்த பிரச்சனையிலிருந்து வெளிவந்து உள்ளதால் மீண்டும் தனக்கான இடத்தை வடிவேலு பிடித்து தற்போது காமெடி மட்டும் ஹீரோவாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் முதலாவதாக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் வெளிவர ரெடியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்களில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க ரெடியாக இருக்கிறார். மேலும் பல்வேறு படங்களில் நடிக்க தற்போது வடிவேலுவை புக் செய்து வருவதால் வளர்ந்து வந்த காமெடி நடிகர்கள் பலரும் வடிவேலு மீது சற்று வயித்தெரிச்சலில் இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் வடிவேலுவின் சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வைகைப்புயல் வடிவேலு ஒரு மதுரைக்காரர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர் தனது சொந்த வீட்டை தற்போதும் பராமரித்து புதுவீடு போல பாதுகாத்து வருகிறார் இதோ காமெடி நடிகர் வடிவேலுவின் சொந்த வீட்டின் புகைப்படம்.

vadivelu

Leave a Comment

Exit mobile version