திரை உலகில் பல்வேறு இசையமைப்பாளர்கள் இருந்தாலும் தனக்கென ஒரு பாணியை பிடித்து குறைந்த திரைப்படங்களுக்கு சூப்பராக இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை வெகு விரைவிலேயே பிடித்தவர் அனிருத்.
இவரது அப்பா சினிமா உலகில் பிரபல நடிகரும் ரஜினியின் நெருங்கிய சொந்தக்காரரின் மகன் தான் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்து டாப் நடிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன்பிறகு அனிருத் அடுத்தடுத்து டாப் நடிகரான அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற படங்களுக்கு இசை அமைத்து தற்போது தொடமுடியாது உச்சத்தை தமிழ் சினிமாவில் எட்டியுள்ளார். மேலும் இவரை தற்போது புக் செய்யவே பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கியூவில் காத்துக் கிடக்கின்றனர்.

மேலும் இவரது இசையில் இந்தியன் 2, விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், பீஸ்ட் போன்ற பல படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. இசையைப்பாளர் அனிருத் அடுத்ததாக தெலுங்கு சினிமா பக்கம் வெகு விரைவிலேயே அடியெடுத்து வைத்து தனது தனது திறமையை வெளிக் காட்ட ரெடியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்கள் வாழ்ந்து வரும் வீட்டின் புகைப்படங்களை நாம் வெளியிட்டு வருகிறோம் அது போல தற்போது இசையைப்பாளர் அனிருத் வாழ்ந்து வரும் பிரம்மாண்ட வீட்டை நாம் தற்பொழுது பார்க்க இருக்கிறோம் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

