நடன புயல் பிரபுதேவாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா? இதோ அந்த புகைப்படம்.

0

திரையுலகில் நடிகர்,நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பன்முகத்திறமைகளை கொண்டு விளங்குபவர் நடிகர் பிரபுதேவா. இவரின் வேகமான நடன திறமையினால் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பலராலும் போற்றப்பட்டார். இந்த நிலையில் இவர் முதலில் மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலில் நடனமாடி மக்கள் மனதை கவர்ந்தார்.

இவர் பல திரைப்படங்களில் நடனம் ஆசிரியராக திரை வாழ்க்கையை பயணித்து வந்த நிலையில் 1989ஆம் ஆண்டில் நடிகை ரோஜாவுக்கு ஜோடியாக இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி உட்பட பல வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஷங்கர் இயக்கத்தில் உருவான காதலன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ராசய்யா,  லவ் பேர்ட்ஸ், மின்சாரக் கனவு, நாம் இருவர் நமக்கு இருவர் உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகின் ஒரு அங்கமாக திகழ்கிறார்.

இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்து வரும் பிரபுதேவாவின் பிரமாண்டமான வீட்டின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

prabhu deva
prabhu deva
prabhu deva
prabhu deva
prabhu deva
prabhu deva
prabhu deva
prabhu deva
prabhu-deva-
prabhu-deva-