மக்கள் நாயகன் விஜயகாந்தின் மருமகளை பார்த்து உள்ளீர்களா.. இதோ புகைப்படம்.

vijayakanth
vijayakanth

80, 90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிக்கும் பொழுது ரஜினி கமல் போன்றவர்களுக்கு அதிக ரசிகர் கூட்டம் இருந்தது இருப்பினும் தனது முழு திறமையையும் படங்களில் வெளிப்படுத்தி ஒவ்வொரு படமும் வெற்றியை ருசிக்க ரசிகர்கள் இவருக்கு அதிகமாகினர். ஒரு கட்டத்தில் ரஜினி கமலுக்கு நிகராக இவர் பெயர் பேசப்பட்டது.

அந்த அளவிற்கு கிராமத்து கதைகளில் நடித்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் அதுவும் சாதாரண வெற்றி அல்ல பிரம்மாண்ட வெற்றியாக மாறியது குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான சத்திரன், கேப்டன் பிரபாகரன், நரசிம்மா, வாஞ்சிநாதன், ரமணா, ஆனஸ்ட்ராஜ் என சொல்லிக்கொண்டே போகலாம்..

அந்த அளவிற்கு வெற்றி படங்களில் நடித்துள்ளார் இப்படி சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிய கேப்டன் ஒரு கட்டத்தில் அரசியல் பிரவேசம் கண்டார் அதிலும் வெற்றியை ருசித்து ஓடிக் கொண்டிருந்த அவருக்கு தற்பொழுது உடல்நல குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் இவரை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களும் அரசியலில் தலைகாட்டி வருகின்றனர்.

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் ஷண்முக பாண்டியன் இளைய மகன் விஜய பிரபாகரன். இதில் இணைய மகன் விஜய பிரபாகரன் சில ஆண்டுகளுக்கு முன் கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பிறகு இருவரும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் திருமணத்தின்போது இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும்  அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய ஜோடியின் புகைப்படத்தை..

vijaya prabhakaran
vijaya prabhakaran