தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்பொழுது தமிழ், தெலுங்கு உட்பட இன்னும் ஏராளமான மொழித் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
இவரின் சிறந்த நடிப்பு திறமையினாலும், டான்ஸ் ஆடும் திறமை நாளும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். தற்பொழுது இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் முதலில் டான்ஸ் மாஸ்டராக தனது கெரியரை தொடங்கினார்.பிறகு தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது ஏராளமான படங்களில் நடித்து சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் சினிமாவையும் தாண்டி பல அனாதை குழந்தைகள் மற்றும் ஆதரவு இல்லாமல் தவிக்கும் முதியவர்கள் என்று அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ்க்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள்.

இதுவரையிலும் ராகவா லாரன்ஸ் தனது மகளை சினிமாவில் தலைகாட்டாமல் வளர்த்து வருகிறார். அந்த வகையில் இவரின் மகள் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் தனது அப்பாவைப் போலவே டான்ஸ் மாஸ்டராக வேண்டும் என்பது கனவாம்.

அந்த வகையில் தற்போது ராகவா லாரன்ஸ் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.