ஹாலிவுட் நடிகை போல் இருக்கும் சந்தானத்தின் மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கவுண்டமணி செந்திலுக்கு நிகரான காமெடி நடிகர்கள் இன்று வரை தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவு தங்களுடைய காமெடியால் ஒட்டுமொத்த மக்களையும் சிரிக்க வைத்தவர்கள். அதன் பிறகு வடிவேலு விவேக் சந்தானம் என பல காமெடி நடிகர்கள் உருவாகினார்கள்.

அது மட்டும் இல்லாமல் ஒரு சில நடிகர்கள் நடிகர்களின் நண்பனாகவோ எதிரியாகவோ அல்லது துணை நடிகராகவோ நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து பல நடிகர்கள் சாதித்துள்ளார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்துடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் சந்தானம்.

இவர் 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக வெள்ளித் திரையில் கால் தடம் பதித்தார் அதனை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தனது காமெடியை மக்கள் மனதில் பதிய வைத்தார் சந்தானம். என்றென்றும் புன்னகை திரைப்படத்திலும் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் வரும் காமெடி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது அது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் சந்தானம் பேசிய வசனம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனால் அந்த வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டது. மேலும் இவர் தொலைக்காட்சியில் 1999 ஆம் ஆண்டு டீக்கடை பெஞ்ச் 2002 to 2010 சகலை விஎஸ் ரகளை 2001 டு 2004 இல் லொள்ளு சபா ஆகிய நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். தொடர்ச்சியாக காமெடியான படங்களில் நடித்து வந்த சந்தானம் ஒரு காலகட்டத்தில் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என  ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

அப்படிதான் சந்தானம் தில்லுக்கு துட்டு என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது இந்த நிலையில் சந்தானம் இன்னும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  சந்தானத்திற்கு திருமணம் முடிந்துவிட்டது இந்த நிலையில் அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் மகனின் புகைப்படம் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியானதை நாம் பார்த்துள்ளோம்..

சந்தானத்தின் மகளையும் புகைப்படத்தில் பார்த்துருக்கலாம் ஆனால் நீண்ட காலம் கழித்து மீண்டும் சந்தனத்தின் மகள் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹாலிவுட் நடிகை போல் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

santhanam actress
santhanam actress

Leave a Comment