தென்னிந்திய திரை உலகை சுமார் 40 வருடங்களாக கட்டிய ஆண்டவர்களில் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பெரிதும் நடித்தாலும் இவரது ஸ்டைல் மற்றும் நடிப்பு மற்ற மொழி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளது இதனால் அவர் நம்பர்-1 இடத்திலேயே இருக்கிறார்.
ஸ்டார் ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜீராவ் காயகவாட் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் ஒரு பஸ் கண்டக்டராக தான் வேலை செய்தார் அப்பொழுது இவர் செய்த லுக் மற்றும் ஸ்டைல் ஆகியவை இவரை இந்த இடத்திற்கு சென்றது.
சினிமாவை சரியாக ஆரம்பத்திலேயே நன்கு உணர்ந்து கொண்ட ரஜினியும் இதை விட்டால் நாம் இன்னும் பல நெருக்கடிகளை சந்திப்போம் என்பதை புரிந்து கொண்டு சினிமாவில் பயணித்தார். தற்போதும் தொடர்ந்து சினிமாவில் நடித்து பல சாதனைகளை புரிந்து வருகிறார் இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ரஜினியை கோடிக்கணக்கான மக்கள் மற்றும் ரசிகர்கள் பின்தொடர்வது மட்டுமல்லாமல் அவரைப் பற்றிய செய்திகளை ஒவ்வொன்றாக சல்லடை போட்டு அறிந்து வருகின்றனர்.
அதனால் ரஜினி என்ன செய்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் ரஜினியின் ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் அவரது தந்தை, அண்ணன், அக்கா ஆகியோர்களை மட்டும் நாம் பெரிதும் பார்த்திருக்க மாட்டோம் அத்தகைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினியுடன் உடன் சேர்ந்து பிறந்தவர்கள் மூன்று பேர் அதில் அவரது அண்ணன்கள் சத்தியநாராயணராவ், நாகேஸ்வரராவ் என இருவர் உள்ளனர். அவர்களுக்கு அடுத்ததாக பாலுபாய் என்ற அக்காவும் இருக்கிறார்.
அவரது அக்காவுடன் ரஜினி எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

