“இமான் அண்ணாச்சி” – யை பார்த்து இருப்பீர்கள்.! அவரது குடும்பத்தை பார்த்தது உண்டா.? இணைய தளத்தில் வைரலாகும் புகைப்படம்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் இமான் அண்ணாச்சி .

அதன் பிறகு தனது பயணத்தை இவர் படிப்படியாக உயர்ந்து கொண்டே வெள்ளித்திரையில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த இமான் அண்ணாச்சிக்கு தற்பொழுது விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 இல் கலந்து கொண்டுள்ளார்.

வீட்டில் தனது சிறந்த காமெடியை கொடுத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளார் மேலும் இவர் பிக்பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் பயணிப்பார்கள் என ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனென்றால் தற்போது மிகப்பெரிய அளவில் சண்டை எதுவும் ஏற்படாததால் ரசிகர்களுக்கு தற்போது இவர் காமெடிதான் பெரிதாக இருக்கின்றன.

மேலும் இவருக்கு தற்போது ரசிகர்கள் அதிக ஓட்டுகளை போட்டுக் கொண்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கஷ்டத்தை பற்றி அவர் பேசி இருந்தார் இமான் அண்ணாச்சி சிரித்துக்கொண்டே சொன்னதால் அதன்வழி கஷ்டம் யாரும் அவ்வளவு எளிதில் உணர வில்லை ஆனால் அவர் கடந்து வந்த பாதை நிச்சயம் ஒரு மிகப்பெரிய ஒரு கஷ்டம் தான் என கூறுகின்றனர்.

ஏனென்றால் சின்னத்திரையில் ஒரு சின்ன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்களை கவர்ந்து பின் வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல என ரசிகர்கள் கூறி அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் இமான் அண்ணாச்சி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

iman-annachi
iman-annachi

Leave a Comment