தமிழ் சினிமாவில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படங்களில் இருக்கிறது. அந்த வகையில் இன்றோடு இருவது வருடங்கள் நிறைவடைந்துள்ள திரைப்படம் தான் அழகி. இந்த திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பின் கிடைத்திருந்தது இப்படிப்பட்ட நிலையில் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படங்களில் ஒன்று அழகி இந்த படத்தை இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கியிருந்தார். மேலும் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயாணி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தார்கள். குறிப்பாக இந்த படத்திற்கு இசைய ராஜா இசையமைத்தார். மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை இந்த திரைப்படம் படைத்தது.
அந்த வகையில் ரசிகர்கள் பற்றியும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வரையிலும் நீங்கா இடத்தினை பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த படத்தில் இடம்பெற்று இருந்த பள்ளி காதல் வாழ்வின் மீது ஏற்படும் தாக்கம் என பல விஷயங்களை கூறிய நிலையில் இதனால் பலரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு பெரிய வெற்றினை பெற்ற இந்த திரைப்படம் வெளியாக இன்றோடு 20 ஆண்டு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.
இதனை கொண்டாடும் வகையில் படக்குழுவினர்கள் சோசியல் மீடியாவில் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். எனவே இதனை பார்த்த பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை நந்திதா தாஸ். தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நந்திதா தாஸ் நடிகை மட்டுமல்லாமல் திரைப்பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர் முதன் முறையாக இயக்கிய திரைப்படம் தான் ஃபிராக். இது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது இவ்வாறு தன்னுடைய முதல் படத்திலேயே பல விருதுகளையும் பெற்றார். நாடகக் குழுவின் மூலம் தான் முதன்முறையாக தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்தார் அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஏராளமான மொழி திரைப்படங்களிலும் நடித்து சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக மாறினார். இப்படிப்பட்ட நிலையில் அழகி திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் அதற்கு நந்திதா தாஸ் தன்னுடைய பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அழகி படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டது இதை நம்பவே முடியவில்லை எனக்கு நரைத்த முடி, கண்ணாடி எல்லாம் வந்துவிட்டது ஆனாலும் 20 வருடங்கள் கடந்தது நம்ப முடியவில்லை அழகி நினைவுகள் இன்னும் பசுமையாகவே என் மனதில் உள்ளது இப்படி ஒரு அற்புதமான படத்தை நடிக்க வைத்ததற்காக இயக்குனர் சங்கர் பச்சனுக்கு நன்றி அதேபோல் என்னுடன் நடித்த அற்புதமான நடிகர்களான பார்த்திபன், தேவயானி, சாயாஜி ஷிண்டே என்று பலருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.