இயக்குனர் ராஜமவுலியின்மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

இந்திய சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் அவர்கள் பல திரைப்படங்கள் எடுத்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க நீண்ட காலம் எடுக்கும்.  அதேபோல் ஒரு சில இயக்குனர்கள் ஒரு சில திரைப் படங்களை இயக்கினாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். ஒரு காலத்தில் முன்னணி நடிகர்கலுக்காக படத்தைப் பார்த்த காலம் போய் தற்போது இயக்குனர் களுக்காக படத்தை பார்த்து வருகிறார்கள் மக்கள்.

நல்ல கதை இருந்தால் மட்டுமே மக்கள் படத்தை விரும்பிப் பார்க்கிறார்கள். அதிலும் ஒரு சில திரைப்படங்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து வருகிறது.  அந்த வகையில் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு புதிய உயரத்தை அடைந்தவர் ராஜமவுலி. ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக பல திரைப்படங்களை இயக்கியவர் என்று கூட கூறலாம்.

மிகப்பெரிய பட்ஜெட் திரைப் படங்களை இயக்கியதன் மூலம் இவர் உச்சத்தை அடைந்தார். சினிமாவில் முதன் முதலாக மாவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் அதன் பிறகு நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பிரபலமடைந்தார்.

தான் இயக்கிய திரைப்படங்கள் வெற்றி கண்டதும் பாகுபலி என்ற பிரமாண்ட திரைப்படத்தின் மூலம் இந்தியாவில் தனக்கென ஒரு இடத்தை சம்பாதித்துக் கொண்டார். இந்த திரைப்படம் பாகுபலி இரண்டாவது பாகமாக வெளியானது. இந்த நிலையில் தற்பொழுது ராஜமௌலி ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என கூறப்பட்டது..

rajamouli
rajamouli

ஆனால் கொரானோ மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் திடீரென படத்தை தள்ளி வைத்துள்ளார்கள் படக்குழு. இந்த நிலையில் திரைப் பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வகையில் இயக்குனர் ராஜமவுலி கடந்த 2001ம் ஆண்டு ராமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கார்த்திகேயா மற்றும் மயூகா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறார்களா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள்.

rajamouli
rajamouli

Leave a Comment