தனுஷின் புதிய வீட்டை பார்த்து உள்ளீர்களா.. பிரம்மாண்டத்தை விட பிரம்மாண்டம்.!

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. வாத்தி திரைப்படம் முழுக்க முழுக்க கல்வியைப் பற்றி பேசும் ஒரு படமாக இருந்ததால்..

ரசிகர்கள் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கூட்டம் கூட்டமாக இந்த படத்தை பார்த்து வருகின்றனர் அதனால் முதல் நாளே 10 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது இரண்டாவது நாளில் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது அதன்படி இரண்டாவது நாளில் மட்டுமே 18 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.

தொடர்ந்து இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் தனுஷ் சந்தோஷமாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் விறுவிறுப்பாக  தனுஷ் ஓடி சம்பாரிக்கும்  கோடிக்கணக்கான ரூபாயை மறுபக்கம் சேர்த்து வைக்கிறார் அதுவும் எப்படி என்றால் வீடு, கார், இடம் வாங்கி போடுகிறார்.

அதன்படி நடிகர் தனுஷ்  போயஸ் கார்டனில் மிகப்பெரிய  அளவில் வீடு ஒன்று கட்டி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அதன் பணிகள் தற்பொழுது நிறைவு பெற்று உள்ளது. இன்று நடிகர் தனுஷ் தனது புது வீட்டிற்கு கிரஹபிரசவத்திற்கு  சென்று உள்ளார். அவருடன் அவரது அப்பா மற்றும் அம்மா என குடும்பமே சென்று இருக்கின்றனர்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்களுடைய பிரம்மாண்ட வீடு சூப்பராக இருக்கிறது என கூறி  கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகர் தனுஷ் புதுசாக கட்டி பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம்.

dhanush - house
dhanush – house
dhanush - house
dhanush – house

Leave a Comment