நடிகர் சூரியின் சொந்த வீட்டை பார்த்து உள்ளீர்களா.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.!

soori
soori

நடிகர் சூரி சினிமா ஆரம்பத்தில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தாலும் இவருக்கு நல்லதொரு பெயரை எடுத்துக் கொடுத்த திரைப்படம் வெண்ணிலா கபடிகுழு. இந்த படத்தில் காமெடியனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் அனைவரும் சூரியை பரோட்டா சூரி என செல்லமாக அழைக்கத் தொடங்கினர் அதன்பிறகு அவருக்கு  பட வாய்ப்புகளும் அதிகமாக குவிய தொடங்கியது. குறிப்பாக டாப் ஹீரோவான ரஜினி அஜித் விஜய் சூர்யா போன்றவர்களுடன் நடித்த தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

தற்போது ஹீரோவாகவும் நடிக்க தொடங்கியுள்ளார் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த படம் வெகு விரைவிலேயே திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இது இப்படி இருக்க..

பிற படங்களிலும் தொடர்ந்து நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் நடிகர் சூரி. சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படத்தில் தனது சிறப்பான காமெடியை வெளிப்படுத்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது அதை தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூரியின் சொந்த ஊரில் இருக்கும் வீட்டின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

காமெடி நடிகர் சூரி மதுரைப் பக்கத்தில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார் தனது சொந்த ஊரில் வீட்டில் இருக்கும் வீட்டை தற்போதும் பயன்படுத்தி மற்றும் பராமரித்து வருகிறார் இதோ அந்த வீட்டை நீங்களே பாருங்கள்.

soori
soori