தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி பின் ஹீரோவாக வெற்றி படங்களில் நடித்து கொண்டிருப்பவர் சசிகுமார். 2008ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்னும் திரைப்படத்தை இயக்கி நடித்தவர் சசிகுமார் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் படமாக மாறியது.
இந்த படத்தில் சசிகுமார் நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடினார் இவரது சினிமா கேரியரில் ஒரு சில படங்கள் இப்பொழுதும் ரசிகர்கள் ரசித்து பார்க்கின்றனர் அந்த அளவிற்கு படத்தில் நடித்துள்ளார்.
அந்த வகையில் நாடோடிகள், சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியன், குட்டி புலி, வெற்றிவேல், கிடாரி போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இப்பொழுது கூட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அந்த படங்கள் கூட ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் இருப்பினும் இயக்குனராக சசிகுமார் சிறந்த கதைகளை கொடுத்துள்ளார்.
அப்படி இருக்கையில் இப்பொழுது இவர் இயக்கினாலும் அந்த படங்கள் ஓடும் ஆனால் படத்தை இயக்க பெரிதளவு ஆர்வம் காட்டாமல் இருப்பது ரசிகர்களுக்கு சற்று மன வருத்தத்தை கொடுத்து வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இருக்கும் வீட்டின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது.

இயக்குனர் சசிகுமார் மதுரை மாவட்டம் தாமரைப்பட்டி ஊரை சார்ந்தவர் இவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் சசிகுமாருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருக்கு சொந்தமாக ஊரில் ஒரு ஓட்டு வீடும், ஒரு மாடி வீடு இருக்கிறது அதன் புகைப்படம் தான் தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.