மனம் கவர்ந்த உங்களின் சீரியல் டி ஆர் பி-யில் எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்த்தீர்களா.! இதோ டாப் 5 லிஸ்ட்

ஒவ்வொரு தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் டிஆர்பி-யில் யார் முதலிடம் பிடிப்பது என்று அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் போட்டிகள் நிலவி வருகிறது அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் சீரியல் ரியாலிட்டி ஷோ என ஒளிபரப்பி டி ஆர் பி யில் இடம் பிடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சீரியலுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவு டஜன் கணக்கில் சீரியல்களையும் ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள்.  அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ஆன பாரதிகண்ணம்மா, ராஜா ராணி 2, ஈரமான ரோஜாவே 2, தமிழும் சரஸ்வதியும் மௌனராகம் 2, நாம் இருவர் நமக்கு இருவர் 2, முத்தழகு, நம்ம வீட்டு பொண்ணு என 15 தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை தக்க வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வாரம் டிஆர்பி லிஸ்டில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல் என்ன என்பதை இங்கே காணலாம்.

முதல் இடத்தைப் பிடித்த சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி சீரியல் தான் இந்த சீரியல் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வருகிறது, இரண்டாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல், மூன்றாவது இடத்தில் பாரதிகண்ணம்மா சீரியல், நான்காவது இடத்தில் தமிழிம் சரஸ்வதியும் என்ற சீரியலும் ஐந்தாவது இடத்தில் மௌனராகம் இரண்டாவது பாகம் சீரியலும் இடம் பிடித்துள்ளது.

மேலும் இந்த வாரத்தில் ஒவ்வொரு சீரியலும் பரபரப்பாக போய்க் கொண்டிருப்பதால் டி ஆர் பி இல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment