நடிகை ஹன்ஷிகா வாழ்ந்து வரும் பிரமாண்ட வீட்டை நீங்கள் பார்த்தது உண்டா.? இதோ அந்த புகைப்படம்.

hanshika

சினிமா உலகிற்கு வருகின்ற புது நடிகைகள் பலரும் கொழுக் மொழுகென்று வந்தாலும் ஒரு கட்டத்தில் உடல் எடையை குறைத்து தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றுகின்றனர். அந்த வகையில் கொழுக் மொழுகென்று இருந்து மக்கள் மத்தியில் குட்டி குஷ்பு என பெயர் எடுத்தவர் தான் ஹன்சிகா.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் சிறப்பாக ஜொலித்த விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி போன்றவர்கள் படத்தில் அடுத்தடுத்து நடித்து வெற்றி கண்டார். இதனால் அவர் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறினார்.

தமிழை தாண்டி ஹிந்தி மற்றும் பிற மொழிகளிலும் வாய்ப்புகள் வர தொடங்கியதால் நடிகை ஹன்சிகா உடல் எடையை குறைத்து பிகினி டிரஸ் போட்டாலும் செம அழகாக இருக்கும் அளவிற்கு உடல் எடையை தாறுமாறாக குறைத்தார் அதற்காக பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த ஹன்சிகா. தற்போது பல்வேறு திரைப்படங்களை தன்வசப்படுத்தி உள்ளார் அந்தவகையில் மஹா, 150 மினிட்ஸ் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸ் பக்கமும் தலை காட்ட தற்போது ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபக்கமிருக்க தனது ரசிகர்கள் பட்டாளத்தை மீட்டெடுக்க சமீபகாலமாக பிகினி டிரஸ் மற்றும் குட்டையான உடைகளை அணிந்து வலம் வருகிறார்.

hanshika
hanshika

இதன் மூலம் ரசிகர்களை மீட்க முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்து வருகிறது.  இந்த நிலையில் சினிமாத்துறையில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் வாழ்ந்து வரும் அவரது வீட்டின் புகைப்படங்களை நாம் வெளியிட்டு வருகிறோம். அதுபோல நடிகை ஹன்சிகாவின் வாழ்ந்து வரும் வீட்டை பற்றி நாம் தற்பொழுது பார்க்க உள்ளோம். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

hanshika
hanshika