தொடங்கி விட்டதா பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு.? அதுவும் இந்த இடத்தில் தான இணையத்தில் வெளியான அதிரடி தகவல்.

0

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் தற்போது பீஸ்ட்  படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஜய் இணைந்து நடித்ததால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்தது.

இதனைத்தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது அதுமட்டுமல்லாமல் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் சமீபத்தில் வெளியானது.

இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் அதுமட்டுமல்லாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி தான் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது படப்பிடிப்புகள் நடத்தலாம் என அரசு அறிவித்ததால் பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிக வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறதாம்.

vijay0
vijay0

இந்த திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் எனவும் விஜய்யின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் எனவும் பல சினிமா பிரபலங்கள் கூறி வருகிறார்களாம். விஜயின் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பை பார்ப்பதற்கு எங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது எப்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.