நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விடுகிறது அதற்கு முக்கிய காரணம் சூர்யா எந்த திரைப்படங்களில் நடித்தாலும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமீப காலமாகவே பல திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதேபோல் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம்தான் ஜெய்பீம் இந்த திரைப்படம் வெளியான பொழுது இந்த திரைப்படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்களும் சூர்யாவை பாராட்டியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து நபர்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அதேபோல் இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நடிகர் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.மேலும் இவர் ஒரு நிஜமான போலீஸ் அதிகாரியாக இருந்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் ஆம் இவர் ஒரு சிலவருடங்களுக்கு முன்பு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தாராம்.
திடீரென்று சினிமா துறையில் இருக்கும் ஆர்வத்தால் போலீஸ் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார் மேலும் போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்கள் என்பதை இவர் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஆம் இவர் டானாகாரன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் எப்படி எல்லாம் கொடுமை செய்வார்கள் என்பது போல தான் இருக்குமாம் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் எப்படிப்பட்டவர் என்பதை இப்பொழுது தான் நாங்கள் தெரிந்து கொண்டோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.