ரிலீஸ் ஆவதற்கு முன்பே கோடிகளை குவிக்கும் “RRR” இதுவரை இத்தனை கோடியை அள்ளியுள்ளதா.! சினிமா உலகிலே இதுவே முதல் முறை.! ராஜமௌலி சும்மாவா..

0

ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இந்திய சினிமாவின் வெற்றி இயக்குனர் என்ற அந்தஸ்தை தற்போது தக்க வைத்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி.

பார்ப்பதற்கு மிக சிம்பிளாக இருந்தாலும் இவரது கற்பனையின் மூலம் மாபெரும் ஹிட் படங்களை கொடுத்து தற்பொழுது சினிமா உலகில் டாப் இயக்குனர் என்ற அந்தஸ்தை தற்பொழுது கையில் வைத்துள்ளார்.

ராஜமௌலி இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள்  2000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

அடுத்ததாக ராஜமௌலி இது போன்ற ஒரு மாபெரும் ஹிட் படத்தை உருவாக்கி வருகிறார்.

படத்தின் பெயர் ரத்தம், ரணம், ரௌத்திரம் (RRR). இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் பலர் நடித்த திரைப்படத்தில் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜய் தேவ்கன் வில்லனாக நடித்துள்ளார் நாயகியாக ஆலியா பட் நடித்துள்ளது இன்னும் சிறப்பம்சமாக பார்க்க படுகிறது.

இந்தப்படம் வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக உள்ளது இதற்கு முன்பே படம் கிட்டத்தட்ட 890 கோடிக்கு மேல் தற்போதைய லாபம் பார்த்து உள்ளது.

இந்திய சினிமாவிலேயே படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவ்வளவு பல கோடியை கைபற்றி அசத்தி உள்ளது.

உலக அளவில் தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமே 570 கோடிக்கு விளம்பரம் ஆகி உள்ளது அதனை தொடர்ந்து டிஜிட்டல் உரிமம் 170 கோடி சேட்டிலைட் உரிமம் 130 கோடி விலை போயுள்ளது மேலும் ஆடியோ ரைட்ஸ் 20 கோடிக்கு விலை போய் உள்ளது.

மேலும் பட குழு இந்த படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் என தற்போது அடித்துக் கூறுகிறது