கமலுக்கு பேரனாக அல்லு அர்ஜுன் நடித்திருக்காரா.! எந்த திரைப்படத்தில் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன் இவர் 80 மற்றும் 90 களில் இருந்தே சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் விரைவில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் நீண்ட வருடங்கள் கழித்து நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு சிறந்த படமாக விக்ரம் திரைப்படம் அமைந்தது.

இப்படி இருக்கும் நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அல்லு அர்ஜுன் அவர்கள் கமலஹாசனுக்கு பேரனாக நடித்திருக்கிறார் இந்த தகவல் மற்றும் புகைபடம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் கமல்ஹாசன் உடன் ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பது என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோசமாக தான் இருக்கும் அந்த வகையில் கே விஸ்வநாத் இயக்கத்தில் கமல் ராதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிற்பிக்குள் முத்து.

இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் நடிகர் அல்லு அர்ஜுன் இவர்களுடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் குழந்தை நட்சத்திரமாக இருப்பதிலிருந்து கமல்ஹாசன் தற்போது வரையிலும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் குழந்தை நச்சத்திரமாக இருந்ததிலிருந்து தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன் என்று கமல் ரசிகர்கள் பெருமையுடன் கூறி வருகிறார்கள்.

இதோ அவர்களது புகைப்படம்…

allu arjun
allu arjun

Leave a Comment