கமலின் “ஆளவந்தான்” படத்திற்கு இசையமைக்க மறுத்த ஹாரிஸ் ஜெயராஜ் – எதனால் தெரியுமா.?

ஒரு படம் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் நடிகர் நடிகைகளையும் தாண்டி மற்றவர்களும்  சரியாக தலையை பார்த்தால் அந்த படம் வெற்றியில் செய்யும் அந்த வகையில் சினிமா என்று வந்துவிட்டால் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுகிறது பேக்ரவுண்ட் மியூசிக் பாடல் போன்றவை படத்திற்கு வலு சேர்க்கின்றன.

அந்த வகையில் இயக்குனர் ஹரிஸ் ஜெயராஜ் பல்வேறு டாப் நடிகர்கள் படங்கள் தொடங்கி இளம் நடிகர்கள் படங்களுக்கு இசை அமைத்து தனது திறமையை காட்டி ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் முதலில் மின்னலே என்ற திரைப்படத்தில் இசை அமைத்து தனது பயணத்தை தொடர்ந்தார் முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதனை அடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கின.ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களின்  படங்களுக்கு சூப்பராக  இசை அமைத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக்கொண்டார். இப்பொழுது கூட துருவ நட்சத்திரம் தி லெஜெண்ட்  போன்ற தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடிக் கொண்டிருந்த ஹரிஸ் ஜெயராஜ். முதன்முதலில் இவர் இசையமைத்த அறிமுகமான திரைப்படம்  மின்னலே. ஆனால் இந்த படத்திற்கு முன்னதாக வேறு ஒரு படத்தில் தான் இவரை இசையமைக்க படக்குழு கூப்பிட்டது ஆனால் ஹேரிஸ் ஜெயராஜ் மறுத்துள்ளார் .

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக செலவில் உருவான திரைப்படம் ஆளவந்தான் இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்திருந்தார் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வைத்து அறிமுகப்படுத்தலாம் என படக்குழு முனைப்பு காட்டியது ஆனால் அவரோ அந்த சமயத்தில் மின்னலே படத்திற்காக பணியாற்ற ரெடியாகி விட்டாராம்.

படக்குழு எவ்வளவோ பேசி ஆளவந்தான் படத்திற்கு இசையமைக்க அழைத்தது நான் மின்னலே படத்தில் கமிட்டாகி விட்டேன் முதலில் அந்த படத்தில் தான் இசையமைப்பேன் என கூறி ஆளவந்தான் படத்தைத் தவிர்த்து உள்ளாராம்.  இது அப்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது ஒரு சிறந்த நடிகர், பிரமாண்ட தயாரிப்பாளர்கள் அவர்களது படத்தில் நடித்தால் மிகப் பெரிய அளவில் ரீச்சாகி இருக்கலாம் ஆனால் அப்போது அதை அவர் தவிர்த்து பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது.

Leave a Comment