ஐபிஎல் போட்டிகளில் விளையாண்டது போதும் – அணிக்கு பயிற்சியாளராக மாறும் ஹர்பஜன்சிங்.

harbhajan singh
harbhajan singh

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சமீப காலமாக ஐபிஎல் சீசன்களில் விளையாடி செம மாஸ் காட்டி வருகிறார் சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல்-ரவுண்டராக புகழப்பட்டவர் ஹர்பஜன்சிங் ஒரு கட்டத்தில் இவர் கழட்டி விடப்பட்டு பின் சென்னை அணிக்காக விளையாடினார்.

அப்பொழுது இவர் விளையாட்டும் நேரம் போக மீதி நேரங்களில் இவர் திருக்குறள் மற்றும் அழகான கவிதைகளை வெளியீடு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவரது வாழ்க்கை திடீரென சினிமா பக்கம் கவர்ந்து இழுத்தது இவர் பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் பிக்பாஸ் லாஸ்லியா உடன் கைகோர்த்து நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் சதீஷ் அர்ஜுன் ஒன்றாகப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். இதில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகள் வருகின்றன இதனால் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் சினிமா பயணம் வளர்ந்துகொண்டே இருக்கிறது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர் கேகேஆர் அணிக்காக அண்மையில் விளையாடி வந்தார்.

ஐபிஎல் 15வது சீசனிலும் அவர்களுக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணி தற்போது கழட்டி விட்டுள்ளது. இதையடுத்து அவர் அவர் வருகின்ற ஜனவரி மாதம் நடக்க உள்ள IPL மெகா ஏலத்தில் கலந்து கொண்டு அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 வயதான ஹர்பஜன்சிங் ஐபிஎல் 15 வது சீசனில் போட்டிகளில் விளையாடாமல்..

ஒரு அணிக்கு ஆலோசகராக பகுதி நேர பயிற்சியாளர் அல்லது வழிகாட்டியாக செயல்பட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன ஆனால் இது எந்த அணிக்காக அவர் செய்யப் போகிறார் என்பத இதுவரையிலும் தெரிய படாமல் மறைமுகமாக இருந்து வருகிறது.