இந்திய அணியில் என்னை எடுக்காதது குறித்து தோனியிடம் பலமுறை கேட்ட ஹர்பஜன்சிங் – தல ரியாக்ஷன் என்ன தெரியுமா.?

dhoni-and-harbhajan
dhoni-and-harbhajan

இந்திய அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அண்மையில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மேலும் இது குறித்து பல்வேறு விஷயங்களையும் பேசி உள்ளார். இந்திய அணியில் 1998ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணிக்காக களம் இறங்கினார் 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை புரிந்தார்.

சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அப்பொழுது பேட்டிங்கிலும் அசுரத்தனமாக அட கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது அதனால் அனைத்து விதமான கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும்  பிடித்த வீரராக ஹர்பஜன்சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம் ஹர்பஜன்சிங் அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் சிலவற்றையும் அங்கு அவர் பேசியுள்ளார் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வர வேண்டும் அந்த வகையில் என்னுடைய வாழ்க்கையில் அனைத்தும் அளித்த என் மனசுக்கு நெருக்கமான கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விடை வருகிறேன் இந்த இருபத்தி மூன்று ஆண்டுகாலம் என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி என பதிவிட்டார்.

31 வயதில் நான் ரடெஸ்ட்டில் 400 விக்கெட்டுக்களை வீழ்த்தி எனக்கு அதன் பின் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை ஏன் என்று எனக்கு தெரியவில்லை நான் 31 வயதில் நான் 400 விக்கெட்டை வீழ்த்திய நான் இன்னும் நாலைந்து வருடங்களில் இருந்திருந்தால் நிச்சயம் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி 500 விக்கெட்டுகளை எடுத்து இருப்பேன் ஆனால் அதற்குள் என்னை இந்திய அணி எடுக்கவில்லை.

400 விக்கெட் வீழ்த்திய ஒரு வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை மர்மமாக இருக்கிறது. நான் விடைபெற்றபோது அணியின் கேப்டனாக தோனி இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பிசிசிஐ அதிகாரிகள் என்னை அணியில் எடுக்க விரும்பவில்லை அதை கேப்டனும் ஆதரித்து இருக்கலாம் என்னை அணியில் எடுக்காதது குறித்து பபல முறை தோனியிடம் கேள்வி எழுப்பினேன் ஆனால் இது குறித்து அவர் வாயைத் திறக்கவில்லை இதற்குமேல் இதை கேட்பது போஜனம் இல்லை எனத்தெரிந்து விட்டுவிட்டேன் என கூறியிருந்தார்.