Happy New Year 2024 : தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற ஹாப்பி நியூ இயர் பாடல்.. உங்களுக்கு எந்த பாடல் பிடிக்கும்..

Happy new year tamil songs : ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பிறந்தால் ஏதாவது நல்லது நடக்கும் என பலரும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள் அந்த வகையில் புத்தாண்டு வந்து விட்டாலே பலரது வாட்ஸ் அப் டிபி யில் புத்தாண்டு பாடல் இருக்கும் இந்த நிலையில் தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள புத்தாண்டு பாடல்களை இங்கே காணலாம்.

கவன்

இயக்குனர் கே வி ஆனந்த இயக்கத்தில் விஜய் சேதுபதி டி ராஜேந்திரன் நடித்த திரைப்படம் தான் கவன் இந்த திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார் விஜய் சேதுபதி ஒரு சேனலில் பணிபுரிந்து வருவார் அப்பொழுது ஒரு வீடியோவை வெளியிடுவார்கள் ஆனால் அந்த பேட்டியை அப்படியே மாற்றி விடுவார்கள். அதன் பிறகு டி ராஜேந்திரன் சின்ன சேனலில் சேர்ந்து எப்படி அந்த பெரிய சேனலை முறியடிக்கிறார்கள் என்பது தான் கதை. இந்த திரைப்படத்தில் ஹாப்பி நியூ இயர் என்ற பாடல் இடம் பெற்றிருக்கும்.

சகலகலா வல்லவன்

கமலஹாசன் நடிப்பில் முத்துராமன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சகலகலா வல்லவன் இந்த திரைப்படத்தை எம். குமரன் தயாரித்திருந்தார் படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “ஹாப்பி நியூ இயர்” பாடல் அன்றிலிருந்து இன்று வரை பேவரைட் பாடலாக இருக்கிறது.

உன்னை நினைத்து

சூர்யா, லைலா, சினேகா, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் உன்னை நினைத்து இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார் காதல் திரைப்படமாக வெளியாகி இந்த திரைப்படத்தில் ஹாப்பி நியூ இயர் என்ற பாடல் ஒளித்திருக்கும். இந்த பாடல் எவர்கிரீன் பாடல் போல் அனைவரையும் கவர்ந்திருந்தது.

90ml

அசரா இயக்கத்தில் ஓவியா நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் தான் 90 எம் எல் இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் இசையமைத்து இருந்தார் படத்தை அனிதா உதீப் தயாரித்து இருந்தார் இந்த திரைப்படத்திலும் மரணமட்ட என்ற பாடல் இடம் பெற்றிருக்கும் ஹாப்பி நியூ இயர் கொண்டாட்ட பாடலாக இந்த பாடலையும் கொண்டாடுகிறார்கள்.

சங்கிலி

இயக்குனர் ராஜேந்திரன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பிரபு, மனோரமா, ஸ்ரீபிரியா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சங்கிலி இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஸ்வநாதன் தான் இசையமைத்து இருந்தார் இந்த படத்திலும் புத்தாண்டை கொண்டாடுவிதமாக ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும்.