தமிழ் சினிமாவின் இரு கண்கள் என கருதப்படும் முன்னணி இயக்குனர் மற்றும் பாடகருக்கு இன்று பிறந்தநாள்!! உங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

0

Happy Birthday to the Leading Director and Singer who is considered the Two Eyes of Tamil Cinema !! We can congratulate you: தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு கொண்டு வந்தவர் இயக்குனர் மணிரத்தினம் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதுபோலவே இசையில் இவரை அடித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு இவர் ஒருவர் மட்டும்தான். இசைராஜா, இசைமேதை, இசைஞானி என்றழைக்கப்படும் இளையராஜா அவர்கள்.

இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள் போன்றவற்றை உருவாக்கி உள்ளார். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களின் மனக்கவலைகளை தன் இசையால் மறக்க வைப்பவர் இளையராஜா.

சினிமாவை தனது இயக்கத்தின் மூலம் முழுமையாக மாற்றி அமைத்தவர், காட்சிகளை கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்துபவர். மௌன ராகத்தில் ஆரம்பித்த இவரது வெற்றிப் பயணம் நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி ரோஜா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மணி போன்ற இவரது படங்கள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்.

தமிழ் சினிமாவில் அதிக வசனங்களை கொண்டு தான் படம் எடுக்கப்படும். ஆனால் அதனை உடைத்தெரிந்தவர் இவர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அவர்களது ரசிகர்கள் இணையதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணமே உள்ளனர்.