என்னோட ஹீரோ தல அஜித்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீடியோவை வெளியிட்ட லைலா.!

தல அஜித் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்கள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கி கேக் வெட்டி கொண்டாடி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் தல அஜித் பிறந்தநாளான இன்று சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் அவருக்கு நேற்றிலிருந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தல அஜித் தற்போது இயக்குனர்,எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து தல அஜித்திற்கு ஜோடியாக ஹிமோ குரோஷி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக தல அஜித் சினிமாவில் உள்ள பிரபலங்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் அதிக உதவிகளை செய்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்நிலையில் அவரது பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்துக்களை கூறும் வகையில் அவருடன் பழகி வந்த நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை கூறி சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல் தல அஜித்துடன் இணைந்து பரமசிவன்,திருப்பதி,தீனா போன்ற பல திரைப்படங்களில் நடித்த லைலா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதில் என் ஃபேவரைட் ஹீரோ தல அஜித்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் பேசி அனுப்பிய இந்த வீடியோ காணொளி தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளி பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment